எந்த தீய சக்தியை எதிர்த்து எம்ஜிஆர் கட்சி தொடங்கினாரோ அதே இடத்தில் இருந்து தவெகவும் தொடங்கியுள்ளது... ஆதவ் அர்ஜுனா கடும் விமர்சனம்!
Dinamaalai March 28, 2025 08:48 PM

தமிழக வெற்றி கழக பொதுக்குழு மேடையில் பேசிய ஆதவ் அர்ஜுனா, இதுவரை தளபதி என்று அழைக்கப்பட்ட நமது தலைவர் இனி வெற்றி தலைவர் என அழைக்கப்பட வேண்டும். எந்த தீய சக்தியை எதிர்த்து எம்ஜிஆர் கட்சி தொடங்கினாரோ அதே இடத்தில் இருந்து நாமும் தொடங்கி உள்ளோம். உட்கட்டமைப்போடு தேர்தலுக்கு தயாராகி வருகிறோம். ஊழல் அமைச்சர்கள், ஊழல் குடும்பத்தை தூக்கி எறிய தயாராகி விட்டோம். பலமான உட்கட்டமைப்போடு தேர்தல் போருக்கு தயாராகி வருகிறோம். அண்ணா பல்கலை. விவகாரத்தை மாநில அரசு மூட பார்த்தது. எதிர்க்கட்சியை எப்படி தேர்வு செய்வது என திமுக புதிய நரேட்டிவ் அமைக்கப் பார்க்கிறது. பிரசாந்த் கிஷோர் வருகை தொடர்பாக திமுக பொய் பிரச்சாரம் பரப்புகிறது. 

தேர்தல் வியூக நிறுவனங்கள் மூலம் திமுக எதிர்க்கட்சிகளை உடைப்பது குறித்து பல்வேறு வியூகங்களை வகுக்கிறார்கள். டெல்லியில் மோடியும், தமிழகத்தில் அண்ணாமலையும் பல்வேறு அரசியல் விஷயங்களை திசை திருப்புகிறார்கள். பெண்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் போது சாட்டையால் அடித்து கொண்டு திசைதிருப்ப முயற்சி. அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி சம்பாதித்தால் அது ஊழல் தான்.  

எம்ஜிஆர் இறக்கும் வரை 'Work From Home'ல்  இருந்தது திமுக. இளைஞர்கள் கூட்டம் 2026 ல் புதிய முடிவெடுக்கும். அண்ணா திமுகவை உருவாக்கிய போது இளைஞர்கள் மட்டும்தான் கட்சியில் இருந்தார்கள். தவெகவில் சாதி கிடையாது, திமுக தான் சாதியை வைத்து அரசியல் செய்கிறது. அண்ணாவின் குறிக்கோள்களை நிறைவேற்றும் ஒரே தலைவர் விஜய் தான். வேங்கைவயலுக்கு விஜய் செல்வார், விளம்பரத்திற்காக அல்ல தீர்வுக்காக. திருமாவளவன் ஏன் வேங்கை வயலுக்கு செல்லவில்லை. திருமாவளவனை தடுத்து நிறுத்தியது யார்? எந்த அதிகாரம்? தவெகவிற்குள் சாதி இருக்கு என பேசுபவர்கள், திமுகவின் ஆட்கள். தவெகவிற்குள் சாதி என்பது, திமுக ஏற்படுத்தும் பொய் பிம்பம். மதிமுகவை எப்படி திமுக ஒழித்ததோ, அதேபோல் விசிகவையும் திமுக ஒருநாள் ஒழிக்கும். திமுக சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்றால் எதற்காக கட்சியை நடத்த வேண்டும்?. உங்களது ரிட்டையர்மென்ட் தயாராகி வருகிறது, சிறை செல்ல தயாராகுங்கள் தவெகவிற்குள் சாதி என்பது, திமுக ஏற்படுத்தும் பொய் பிம்பம். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுத்துக் கொள்ளலாம் என கூறினார்.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.