இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஸ்மார்ட் போன் பயன்பாடு என்பது அதிகமாகவே உள்ளது. ஸ்மார்ட் போன் மூலமாக கூகுள் pay, போன் பே உள்ளிட்ட செயலிகள் மூலம் பணம் அனுப்புவது, ரீசார்ஜ் செய்வது மற்றும் ஷாப்பிங் செய்வது என அனைத்து விஷயங்களும் எளிதாகி விட்டது. UPI என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. UPI வந்த பிறகு பணத்தை கையில் எடுத்து செல்வது குறைந்துவிட்டது. UPI இல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்தனையும் பாதுகாப்பானதாக இருப்பதற்கு நான்கு அல்லது ஆறு இலக்க பின் நம்பரை உள்ளிட வேண்டும். இந்த அம்சம் சரியான பயனரால் பணம் செலுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக வடிவமைக்கப்பட்டது.
PIN நம்பரை அமைப்பதற்கு டெபிட் கார்டு மிக முக்கியமான ஆவணம். ஆனால் இப்போது ஆதார் அட்டை உதவியோடு உருவாக்க முடியும். அதன் பிறகு UPI செயலியில் add bank account என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பிறகு உங்களுடைய வங்கி கணக்கை தேர்ந்தெடுக்கவும். உங்களுக்கு பதிவு செய்யப்பட்ட செல்போன் என்னுடன் வங்கி கணக்கு தானாகவே இணைக்கப்பட்டுவிடும். இதனை அடுத்து யுபிஐ பின் நம்பரை அமைக்கும் விருப்பம் வரும்போது ஆதார் ஒடிபி விருப்பத்தை தேர்ந்தெடுத்து ஆதாரோடு இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு அனுப்பப்பட்ட ஓடிபி நம்பரை உள்ளிட்டு சமர்ப்பிக்க வேண்டும். பிறகு ஆறு அல்லது நான்கு இலக்கம் கொண்ட புதிய யுபிஐ PIN நம்பர் உருவாக்கி பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.