உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஒரு தொடக்க பள்ளியில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது அங்கன்வாடி பணியாளருக்கும், உதவி ஆசிரியையுமான ப்ரீதி திவாரிக்கும் இடையில் கடும் கைகலப்பு ஏற்பட்டது. பள்ளி வளாகத்திலேயே நடந்த இந்த மோதலை மாணவர்கள் அனைவரும் பார்த்தனர். இந்த மோதலின் போது, இரண்டு பெண்களும் தரையில் விழுந்து ஒருவரையொருவர் முடியை இழுத்து, அடித்து, தள்ளியபடி இருந்தனர்.
தகவல் கிடைத்ததும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பிளாக் கல்வி அலுவலர் கைலாஷ் ஷுக்லாவிடம் விசாரணை பொறுப்பை வழங்கியுள்ளார். இது தொடர்பாக நடத்திய விசாரணையில், ப்ரீதி திவாரி தான் முதலில் தாக்குதல் நடத்தியதாகவும், Chandravati என்ற அங்கன்வாடி பணியாளருக்கு கடுமையான காயம் ஏற்பட்டு, அவரது குடும்பத்தினர் அவரை ஃபரீதாபாத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதல் முதல் முறை நடந்தது கிடையாது எனவும் இதேபோன்று ஏற்கனவே ஆசிரியை ப்ரீதி தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விரைவில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி கொடுத்துள்ளனர்.