#featured_image %name%
காங்கிரஸ் கூட்டணி அரசில் மத்திய அமைச்சர்களாகப் பதவி வகித்தபோது, தமிழகத்தில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழ் மக்கள் நலனுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பல முறை தன்னைச் சந்தித்தபோதும் அது குறித்து ஒரு வார்த்தை கூடப் பேசாமல், திமுக எம்பிக்கள் இரட்டை வேடம் போடுவதை நாடாளுமன்றத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டினார் மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் Amit Shah அவர்கள்.– என்று கு. அண்ணாமலை கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் மக்களவையில் குடிப்பெயர்வு மற்றும் வெளிநாட்டினர் மசோதா தொடர்பான விவாதம் நடந்தது. அப்போது திமுக., எம்பி., கனிமொழி பேசுகையில், குடிப்பெயர்வு மற்றும் வெளிநாட்டினர் மசோதாவில் சிறப்பு பரிந்துரைகளை இணைக்க வேண்டும். அந்த வகையில், இலங்கை தமிழ் அகதிகளை நீண்ட கால அகதிகளாக சட்டத்தில் தனித்துவமான வகையாக அங்கீகரிக்க வேண்டும். 20 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவில் வாழ்ந்தவர்கள் அல்லது இங்கே பிறந்தவர்களுக்கு விதி விலக்கு அளிக்க வேண்டும். இலங்கை தமிழ் அகதிகளுக்கு விரைவான குடியுரிமைக்கு சட்டப்பூர்வ பாதையை மத்திய அரசு உருவாக்க வேண்டும்” என்றார்.
கனிமொழியின் இந்தப் பேச்சுக்கு உடனடியாக பதில் அளித்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. அவர் பேசுகையில், “நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இத்தனை தமிழ் அகதிகள் வந்துள்ளனர் என்று தெரிவித்தார். மேலும் அவர்களுக்கான இந்திய அரசாங்கத்தின் கொள்கை என்ன? என்றும் கேட்டார். அவர் மிகவும் நன்றாகத்தான் பேசினார். இலங்கை அகதிகள் விஷயத்தில் கனிமொழிக்கு இதயம் எப்படி வலிக்கிறதோ, அதே மாதிரிதான் எனது இதயமும் வலிக்கிறது. அகதிகளுக்கான எங்கள் கொள்கை என்ன? என்று கனிமொழி கேட்டார். நான் அதை பற்றி விளக்கம் அளிக்கிறேன்..
இலங்கை அகதிகளுக்கான 1986-ம் ஆண்டின் இந்திய அரசாங்கத்தின் கொள்கை அப்படியேதான் இப்போதும் உள்ளது. நீங்கள் (திமுக) 10 ஆண்டுகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தில் இருந்த போதும் கொள்கை அப்படியே இருந்திருக்கிறது.. 10 ஆண்டுகளாக தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தார், டி.ஆர்.பாலுவும் ஒரு அமைச்சராக இருந்தார். ஆனால் அவர்கள் எதுவும் செய்யவில்லை. இப்போது நீங்கள் என்ன செய்தீர்கள்? என்று எங்களிடம் கேள்வி கேட்கிறீர்களா? அப்போது நீங்கள் நடவடிக்கை எடுத்திருந்தால், எங்களிடம் கேட்க வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது. எங்களுக்கும் வசதியாக இருந்திருக்கும்.
தமிழ் அகதிகளுக்கான நீங்கள் வகுத்த கொள்கையில் நாங்கள் ஒரு ‘கமா’வைக் கூட மாற்றவில்லை. திமுக., அங்கம் வகித்த அரசாங்கத்தில் இருந்தபோது பின்பற்றப்பட்ட அதே கொள்கையை நாங்கள் அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கிறோம். நீங்கள் ஏதேனும் மாற்றங்களை விரும்பினால், அவற்றை என்னிடம் கொடுங்கள். அதை நாங்கள் பரிசீலிப்போம்..” என்றார்.
அப்போது வடசென்னை தொகுதி எம்பி., கலாநிதி வீராசாமி குறுக்கிட்டு, “நீங்கள் ஏதாவது செய்யுங்கள்!” என்று அமித் ஷாவைp பார்த்து கோரிக்கை வைத்தார்.
அதற்கு பதில் அளித்த அமித்ஷா, “இதுவரை, திமுக., எம்பி.,க்கள் அனைவரும் வெவ்வேறு பிரச்னைகள் தொடர்பாக நான்கு முறை என்னை சந்தித்துள்ளனர். ஆனால் ஒரு முறைகூட அவர்கள் தமிழ் அகதிகளைப் பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை. ஆனால் இப்போது ”ஏதாவது செய்யுங்கள், ஏதாவது செய்யுங்கள்” என்று கூறுகிறார்கள். நீங்கள் தமிழ் அகதிகள் தொடர்பான பிரச்சினையை ஒருபோதும் எழுப்பவில்லை. உங்கள் கொள்கை நல்லதாகத்தான் இருக்கும் என்று கருதி, நாங்கள் அதை பின்பற்றி வருகிறோம். இப்போதும் கூட, நீங்கள் ஏதாவது பரிந்துரைத்தால், நாங்கள் அதைப் பரிசீலிப்போம்” என்று பதில் அளித்தார் அமித் ஷா..
ஆக திமுகவின் இரட்டை வேஷம் அம்பலமாகியுள்ளது.
News First Appeared in