#featured_image %name%
ஐ.பி.எல் 2025 – ஹைதராபாத் vs லக்னோ – ஹைதராபாத் – 27.03.2025
வல்லவனுக்கு வல்லவன் இந்த இவ்வையத்தில் உண்டு
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியை (190/9, ட்ராவிஸ் ஹெட் 47, அனிகெட் வர்மா 36, நிதீஷ் குமார் ரெட்டி 32, கிளாசன் 26, ஷர்துல் தாகூர் 4/34, ஆவேஷ் கான், திக்வேஷ் ரத்தி, ரவி பிஷ்னோய், பிரின்ஸ் யாதவ் தலா ஒரு விக்கட்) லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி (16.1 ஓவரில் 193/5, நிக்கோலஸ் பூரன் 70, மிட்சல் மார்ஷ் 52, அப்டுல் சமத் 22, பேட் கம்மின்ஸ் 2/29, ஷமி, சாம்பா, ஹர்ஷல் படேல் தலா ஒரு விக்கட்) 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவா தலையா வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் அபிஷேக ஷர்மா (6 பந்துகளில் 6 ரன்), அதற்கடுத்து வந்த இஷான் கிஷன் (பூஜ்யம் ரன்) இருவரும் விரைவில் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் வந்த நிதீஷ் குமார் ரெட்டி (28 பந்துகளில் 32 ரன், 2 ஃபோர்) மற்றொரு தொடக்க வீரரான ட்ராவிஸ் ஹெட் உடன் இணைந்து (28 பந்துகளில் 47 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்) அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இவர்கள் இருவரைத் தவிர மற்றவர்களான ஹென்றி கிளாசன் (17 பந்துகளில் 26 ரன்,) அனிகெத் வர்மா (13 பந்துகளில் 36 ரன்) பாட் கம்மின்ஸ் (4 பந்துகளில் 18 ரன், 3 சிக்சர்), ஹர்ஷல் படேல் (11 பந்துகளில் 12 ரன்)ஆகியோர் ஹைதராபாத் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருப்பினும் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கட்டுகள் இழப்பிற்கு 190 ரன் எடுத்தது.
191 ரன் என்ற கடினமான வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாக ஆடவந்த லக்னோ அணியின் தொடக்க வீரர் ஐடன் மர்க்ரம் (1 ரன்) மோசமான தொடக்கம் தந்தார். அவருடன் களமிறங்கிய மிட்சல் மார்ஷ் (31 பந்துகளில் 52 ரன், 7 ஃபோர், 2 சிக்சர்) சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவருக்கு ஜோடியாக நிக்கோலஸ் பூரன் (26 பந்துகளில் 70 ரன்) மிக அற்புதமாக விளையாடினார்.
அவரது ஆட்டத்தால் லக்னோ அணியின் வெற்றி கிட்டதட்ட உறுதியாகி விட்டது. அதன் பின்னர் வந்த ரிஷப் பந்த் (15 பந்துகளில் 15 ரன்), ஆயுஷ் பதோனி (6 பந்துகளில் 6 ரன்), டேவிட் மில்லர் 7 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 13 ரன்), அப்துல் சமத் (8 பந்துகளில் 22 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) ஆகியொர் 16.1 ஓவர்களிலேய வெற்றி இலக்கை அடைய உதவிசெய்தனர்.
லக்னோ அணியின் பந்துவீச்சாளர், ஷர்துல் தாகூர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இந்த வருட ஐபிஎல் ஆட்டங்கள் எல்லாம் அதிரடி மட்டையாளர்களின் ஆட்டமாக மாரிவிட்டது. பந்துவீச்சாளர்கள் மட்டையாளர்கள் சிக்சராக அடிப்பதைப் பார்த்துக்கொண்டு தலையைத் தொங்கப் போட்டவாறு செல்கின்றனர். நேற்று ஷமியின் பந்துகளை நிக்கோலஸ் பூரன் சிக்சர் அடிக்கும்போது பரிதாபமாக இருந்தது.
News First Appeared in