நடிகர் சூரி தமிழ் சினிமாவில் தற்போது ஹீரோவாக வளம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் விருது விழா ஒன்றில் சூரி பங்கேற்றார். அப்போது அங்கு சிறப்பு விருந்தினராக இயக்குனர் பாரதிராஜா வந்த நிலையில் நடிகர் சூரி தனக்கு நிகழ்ந்த அனுபவத்தை மேடையில் பகிர்ந்தார். அதாவது, “நான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த காலகட்டத்தில் மதுரையில் பாரதிராஜா அலுவலகத்தில் சினிமாவில் நடிக்க ஆட்களை தேர்வு செய்வதாக தகவல் கிடைத்தது. அப்போது என்னிடம் பேசிய நண்பன் கிராமத்தான் போன்ற கெட்டப்பில் வந்தால் பாரதிராஜா உடனே உன்னை படத்தில் நடிக்க செலக்சன் செய்து விடுவார் என்று சொன்னார் .
அவர் சொன்னதை நம்பி லுங்கி நெஞ்சுவரை தூக்கி கட்டி, வாயில் பீடி,கையில் மஞ்சப்பை என்ற கெட்டப்பில் பாரதிராஜா ஆபீஸ் வாசலில் நின்றேன். ஆபீஸ் வாசலில் ஒரே கூட்டமாக இருந்தது. அங்கிருந்து எல்லோருமே பேண்ட் சட்டையோடு இருக்கும் போது நாங்க மட்டும் இப்படி வித்தியாசமான கெட்டப்பில் இருந்தோம். டைரக்டர் பாரதிராஜா வந்துவிட்டார். ரொம்ப நேரமாக அங்கே நின்றிருந்தோம் யாரும் எங்களை கூப்பிடவே இல்லை.
அப்போது பக்கத்தில் இருந்த ஒரு அப்பார்ட்மெண்டில் இருந்து ஒரு கும்பல் எங்களை சுற்றி வளைத்து விட்டது. அங்கிருந்து சிலர் இவங்கதான் 5 நாளைக்கு முன்னாடி ஒரு கார் டயரை திருடிட்டு போனவங்க என்று சொன்னார்கள். நாங்க நடிகர்கள் டைரக்டர் பாரதிராஜா கிட்ட நடிக்க சான்ஸ் கேட்டு வந்திருக்கும் என்று சொல்லி ஒரு வழியா அவங்க கிட்ட இருந்து தப்பித்து வந்தோம்” என்று கூறியுள்ளார்.