“ஆஸ்கார்” விருதுக்கே சென்ற சந்தோஷ் படம்…. ஆனால் இந்தியாவில் மட்டும் வெளியிடக்கூடாது… அதிரடி தடை… ஏன் தெரியுமா..?
SeithiSolai Tamil March 28, 2025 08:48 PM

இந்திய திரைப்பட இயக்குனர் சந்தியா சூரி இயக்கிய ‘சந்தோஷ்’ என்ற படம் வெளிநாடுகளில் திரைக்கு வந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. இருப்பினும் இந்தியாவில் இந்த திரைப்படத்தை திரையிட தணிக்கை வாரியம் (CBFC) மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தப் படம் இங்கிலாந்து சார்பாக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கதையில் ,வட இந்தியாவில் கணவன் இறந்த பிறகு அவர் பார்த்துக் கொண்டிருந்த போலீஸ் வேலை மனைவிக்கு அளிக்கப்படுகிறது, பின்னர் ஒரு பட்டியலின பெண்ணின் கொலை வழக்கு ஒப்படைக்கப்படுகிறது. வட இந்தியாவில் நிகழும் ஜாதி வேறுபாடு, இஸ்லாமிய வெறுப்பு, பாலியல் வன்முறை போன்ற காட்சிகள் இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்தது.

இது சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதி இந்த படத்தில் சில காட்சிகளை நீக்க கோரி தணிக்கை வாரியம் உத்தரவிட்டது. அதை படக்குழுவினர் செய்ய மறுத்த நிலையில் தணிக்கை வாரியம் படத்தை வெளியிட தடை விதித்துள்ளது.

இதுக்குறித்து இயக்குனர் சந்தியா சுரி ‘இந்தியாவில் இந்த படத்தை வெளியிட எனக்கு ஆர்வமாக இருந்தது. அதை செயல்படுத்த ஏதாவது வழி இருக்குமா என்று முயற்சித்தேன். ஆனால் தணிக்கை வாரியம் சில காட்சிகளை எடுக்க சொல்லி பட்டியலை கொடுத்தது.அவ்வாறு செய்ய எங்களுக்கு கடினமாக இருக்கிறது.

இதுபோன்ற காட்சிகள் இந்திய சினிமாவுக்கு புதியது என்றோ அல்லது வேறு படங்களில் காட்டவில்லை என்றோ நான் நினைக்கவில்லை. தணிக்கை வாரியம் வெளியிட்டுள்ள பட்டியலை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, பெரும் ஏமாற்றத்தை எங்களுக்கு அளித்துள்ளது’ என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக படத்தின் கதாநாயகி ஷஹானா கோஸ்சாமி ‘ படத்தை வெளியிடுவதற்கு சென்சார் நிறுவனம் சில மாற்றங்களை செய்ய பட்டியலை வழங்கியது. ஆனால் எங்கள் படக்குழு அதை செய்ய ஒப்புக்கொள்ளவில்லை, ஏனென்றால் தணிக்கை வாரியம் நிறைய மாற்றங்களை செய்ய விரும்புகிறார்கள்.

அதனால் இந்தப் படத்தை இந்தியாவில் வெளியிட முடியவில்லை. இம்மாதிரியான படங்களை இந்தியாவில் வெளியிட இவ்வளவு கடினமாக உள்ளது வருத்தமளிக்கிறது’ என்று கூறியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.