Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.
மீனா பார்வதியிடம் கால் செய்து விஜயா குறித்து கேட்க அவ கோபத்தில் இருப்பதாக சொல்கிறார். மேலும், உனக்கு பண்ண பாவத்துக்கு தான் இப்போ அனுபவிக்கிறா என்கிறார். ஆனால் மீனா அதெல்லாம் நான் நினைக்கலை. நீங்க அவங்களை சொல்லி அனுப்பி வைங்க என்கிறார்.
முத்து வந்து யாரிடம் பேசுற எனக் கேட்க பார்வதி ஆண்ட்டியிடம் என்கிறார். அத்தை குறித்து மாமாவிடம் பேசுனீங்களா எனக் கேட்க அவளா போனா அவளே வருவா என்கிறார். மனோஜ், ரோகிணியிடம் பேசுனாறா எனக் கேட்க அவன் அம்மா சொல்லாம எதையும் செய்யவே மாட்டான் என்கிறார்.
இந்த பிரச்னையை சரி செய்ய ஒரே வழி பாட்டியை கூட்டிக்கிட்ட வரதுதான் என்பதை முடிவெடுக்கின்றனர். மனோஜ் குடித்துவிட்டு பைக்கில் அவர் நண்பருடன் வர அருண் மற்றும் மற்ற போலீஸ் நின்று செக்கிங்கில் இருக்கின்றனர். அப்போது அவர் நண்பரை மட்டும் செக் செய்கிறார்.
ஆனால் மனோஜ் அவர் குடிக்கவே இல்லை. என்னை செக் பண்ண வேண்டும் என்கிறார். அவர் அலப்பறை அதிகமாக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்கின்றனர். ரோகிணி சோகமாக இருக்க வித்யா சாப்பாடு எடுத்துக்கொண்டு வருகிறார்.
உடம்பை கெடுத்துக்காதே எனக் கூற என் வாழ்க்கையை நான் காப்பாத்திப்பேன் என்கிறார். அதுக்கு தெம்பு வேண்டும் எனக் கூற மனோஜ் சாப்பிட்டானா என யோசிக்க போன் பண்ணி கேளு எனக் கூற அதெல்லாம் நான் பண்ண மாட்டேன் என்கிறார்.
இதுக்கு இன்னொருத்தரா இருந்தா உன்னை தூக்கி போட்டு மிதிச்சி இருப்பாங்க. அவரா இருக்கதால அமைதியா இருக்காரு என்கிறார். நான் மனோஜை எதுக்காகவும் விட்டு கொடுக்க மாட்டேன் என்கிறார். மனோஜை காவல் நிலையத்தில் அழைத்து வருகின்றனர்.
என் பொண்டாட்டி என்கிட்ட பொய் சொல்லிட்டா என புலம்பி கொண்டு இருக்க மனோஜின் சட்டையை கழட்டி உட்கார வைக்கின்றனர். பார்க் நண்பர் வந்து முத்துவிடம் மனோஜை அரெஸ்ட் செய்த விஷயத்தை சொல்ல அவர் அண்ணாமலையை அழைத்து கொண்டு போலீஸ் ஸ்டேஷன் வருகிறார்.