உலகின் பணக்காரர் பட்டியலில் இருந்து வெளியேறிய முகேஷ் அம்பானி.. முந்திக் கொண்ட கௌதம் அதானி!
ET Tamil March 28, 2025 08:48 PM

ஹுருன் குளோபல் ரிச் லிஸ்ட் 2025 இன் படி, முகேஷ் அம்பானி இப்போது பணக்காரர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இப்போது இல்லை. இதற்குக் காரணம் முகேஷ் அம்பானியின் நிகர மதிப்பு சரிவுதான். கடந்த ஒரு வருடத்தில் முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு மொத்தம் ரூ.1 லட்சம் கோடி குறைந்துள்ளது. இப்போது முகேஷ் அம்பானியின் நிகர மதிப்பு ரூ.8.6 லட்சம் கோடியாகும். அதே நேரத்தில், இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி இன்னும் முதலிடத்தில் உள்ளார். இந்தியாவின் இரண்டாவது பணக்காரர் கௌதம் அதானி ஆவார். கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 13 சதவீதம் அதிகரித்துள்ளது, அதன் பிறகு கௌதம் அதானியின் சொத்து மதிப்பு ரூ.8.4 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.உலகின் மிகப் பெரிய பணக்காரர் பற்றிப் பேசுகையில், டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் இன்னும் உலகின் மிகப் பெரிய பணக்காரர் ஆவார். அவரது செல்வம் 82 சதவீதம் அதிகரித்துள்ளது. எலோன் மஸ்க்கின் மொத்த சொத்து மதிப்பு 420 பில்லியன் டாலர்களாக உள்ளது.ஹூருன் ஆராய்ச்சி நிறுவனம் 2025 ஆம் ஆண்டின் உலகின் டாப் 10 பணக்கார பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் முன்னணி ஐடி தொழிலதிபரான HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ரோஷ்னி நாடார் உலகின் டாப் 10 பணக்கார பெண்களின் பட்டியகில் ஐந்தாவது இடம்பிடித்துள்ளார். இது இரு வரலாற்றுச் சாதனை என்றே கூறலாம். ஏனெனில் இதுவரை இந்த பட்டியலி எந்த இந்திய பெண் தொழிலதிபரும் இருந்ததில்லை. 3.5 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் உலகின் ஐந்தாவது பணக்கார பெண்மணி இவர்தான்.