ஐபிஎல் 20 ஓவர் போட்டியானது 2020 ஆம் வருடம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய வீரர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு முன்னணி வீரர்களும் இணைந்து விளையாடுவதால் இந்த போட்டிக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் மவுசு உண்டு. இதனால் 18 வது சீசன் தற்போது களைகட்டி கொண்டிருக்கிறது. இதுவரை நடந்த 17 தொடர்களில் அதிகபட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா ஐந்து முறை கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. இந்த தொடரில் மேலும் சுவாரசியத்தை கூட்டுவதற்காக 2020 ஆம் வருடம் இம்பேக்ட் வீரர் என்ற விதிமுறை கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில் சென்னை அணியின் சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் விருது வழங்குவதில் கூட பேட்ஸ்மன்களுக்கு உள்ளது போன்ற சிறப்பான விருதுகள் பவுலர்களுக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார். எனவே பவுலர்கள் மைதானத்தில் இருந்து பந்தை எடுத்துக்கொண்டு வெளியே ஓடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் கிண்டலடித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு போட்டிக்குமே குறைந்தது பத்து விருதுகள் வழங்குகிறார்கள். ஆனால் யாராவது நன்றாக பந்து வீசினால், நல்ல ஓவர் வீசினால் அவர்களுக்கு விருது கிடையாது. ஆனால் பேட்ஸ்மேன்களுக்கு விருதுகள் எல்லாம் இருக்கின்றன. எனவே பந்துவீச்சாளர்கள் மைதானத்தில் இருந்து பந்தை எடுத்துக்கொண்டு வெளியே ஓடும் காலம் தூரத்தில் இல்லை. நாங்கள் பந்து வீசவில்லை என்றால் நீங்கள் எதை அடிப்பீர்கள்” என்று கூறியுள்ளார்.