இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டி குறித்து முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் ஆர்சிபி அணியை எச்சரித்துள்ளார். அதாவது CSK அணியிடம் இருக்கும் பந்துவீச்சாளர்களின் தரத்தை கருத்தில் கொண்டால் பெங்களூர் வெல்வது மிகப்பெரிய சவாலாக இருக்கும். சென்னை அணியின் பலத்தை எதிர்கொள்ள பெங்களூரு அணியில் மாற்றம் செய்வார்கள்.
ஆனால் சென்னை அணியின் கோட்டை சேப்பாக்கத்தில் எந்த தவறும் செய்து விடாதீர்கள். அங்கு சிறந்து விளங்குவதை மையமாகக் கொண்டுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் முழு அமைப்புமே கட்டமைக்கப்பட்டது. சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா மற்றும் நூர் அகமது ஆகியோர் அங்கு நிச்சயம் சவாலாக இருப்பார்கள் என்று கூறியுள்ளார்.