பிரபல ஹாலிவுட் திரையரங்கில் பிரபலமானவர் நடிகர் கிளைவ் ரெவில். இவர் 94 வயதில் உடல் நலக்குறைவால் காலமானார். நியூசிலாந்தை சேர்ந்த இவர் கடந்த சில வருடங்களாகவே Dementia (மறதி நோய்) என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார் . அனிமேஷன் சீரிஸ் மற்றும் ஸ்டார் வார்ஸ் கதாபாத்திரங்களில் உலகம் முழுவதும் ரசிகர்களை கவனம் ஈர்த்தவர். 1955 மற்றும் 2016 க்கு இடையில் சுமார் 200 திரை வேடங்களில் தோன்றிய ஒரு பல்துறை மற்றும் நீண்டகால நடிகராக இருந்தார்.
அவர் மேடை நடிப்புக்காகவும் நன்கு அறியப்பட்டவர். ரெவில் 1961 மற்றும் 1963 ஆம் ஆண்டுகளில் முறையே இர்மா லா டூஸ் மற்றும் ஆலிவர் திரைப்படங்களில் நடித்ததற்காக டோனி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் . இந்த நிலையில் அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.