ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவினுடைய செயல்பாடு கேப்டனாக மட்டுமின்றி ஒரு வீரராகவும் பெரிதாக ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை . மேலும் சிட்னியில் நடைபெற்ற கடைசி போட்டியில் இருந்தும் விலகி அணியை வழிநடத்தும் வாய்ப்பை பும்ராவிடம் வழங்கப்பட்டதால் ரோகித் சர்மா கடும் விமர்சனங்களை சந்தித்தார் . இந்த நிலையில் அடுத்து வரவிருக்கும் டெஸ்ட் தொடர் குறித்த தகவல் வெளியாகவுள்ளது.
அதாவது ரோஹித் ஷர்மா ஆஸ்திரேலியாவில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியே இருந்தாலும் ஜூன் மாதம் நடக்க இருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியை ரோகித் சர்மா வழி நடத்துவார் என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும் அனைவருடைய கவனமும் தற்போது ஐபிஎல் போட்டி மீது இருக்கும் நிலையில் மே மாதம் இறுதி வாரத்தில் இங்கிலாந்து டெஸ்ட் தொடர்காக விளையாடும் இந்திய அணி வீரர்கள் குறித்து பிசிசிஐ அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறத.