கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்..! கோவையில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்… எங்கு தெரியுமா..??
SeithiSolai Tamil March 28, 2025 10:48 PM

முதல்வர் மு.க ஸ்டாலின் மக்களவைத் தேர்தலின் பொழுது கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார். இதற்காக சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஒண்டிப்புதூர் பகுதியானது தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்திய விமான நிலைய ஆணையத்திடமிருந்து தடையில்லா சான்றுகளும் வாங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த மைதானம் ஏற்பாடு தொடர்பான முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஒண்டிப்புதூர் அரசு புறம்போக்கு திறந்தவெளி சாலையில் 28 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கும் திட்டத்திற்கான குறிப்புகளை இந்திய மற்றும் சர்வதேச கிரிக்கெட் மைதானங்களோடு ஒப்பிட்டு ஆலோசகர்கள் முன்மொழிந்துள்ளனர் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.