தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத்தொடரில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அதில் 3 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 104 விளையாட்டு வீரர்களுக்கு இதுவரை பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. FICCI சார்பில் 2024 ம் ஆண்டுக்கான விளையாட்டு ஊக்குவிக்கும் சிறந்த மாநிலத்திற்கான விருது வழங்கப்பட்டது.
24 நாடுகள் கலந்து கொள்ளும் ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை 2025 போட்டிகள் சென்னை மற்றும் மதுரையில் ரூ 55 கோடி செலவில் நடத்தப்படும். இவ்வுலக கோப்பையில் 24 நாடுகள் பங்கேற்பது இதுவே முதல்முறை. இதில் மொத்தம் 72 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என விளையாட்டு மேம்பாட்டு துறை மானிய கோரிக்கையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.