முதல்வர் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். இதற்காக சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஒண்டிப்புதூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்திய விமான நிலைய ஆணையத்திடமிருந்து தடையில்லா சான்றுகளும் வாங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மைதானம் ஏற்பாடு தொடர்பான முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஒண்டிப்புதூர் அரசு புறம்போக்கு திறந்தவெளி சாலையில் 28 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும்.இத்திட்டத்திற்கான குறிப்புகளை இந்திய மற்றும் சர்வதேச கிரிக்கெட் மைதானங்களோடு ஒப்பிட்டு ஆலோசகர்கள் முன்மொழிந்துள்ளனர் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கொள்கை விளக்கக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.