பொதுவாக வேர்க்கடலை எடுத்துக்கொள்வதால் குடல் புற்று நோய் குணமாகும் .மூளை திறன் அதிகரிக்கும் .,மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் . ,இப்பதிவில் இதன் நன்மை தீமை பற்றி காணலாம்
1.மேலும் அல்சைமர் , ,எக்சிமா, சோரியாசிஸ் நோய்கள்,தலைமுடி உதிர்வு போன்ற பிரச்சினைகளை தடுக்கும் .,
2.மேலும் தசைகள் பலம் பெற,மன அழுத்த பிரச்சனை குணமாக,பித்தப்பை கற்கள் கரைய இது மிகவும் பயன் தரும் .இதில் இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் சிலருக்கு இது அலர்ஜி ஏற்படுத்தும் .
3.நிலக்கடலை ஒவ்வாமை அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற அமெரிக்க , ஐரோப்பிய நாடுகளில் உள்ள மக்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது.
4.அந்த நாடுகளில் 100 பேரில் 2.5 என்ற அளவில் நிலக்கடலை ஒவ்வாமை காணப்படுவதாக அவர்கள் நடத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.சமீபகாலங்களில் இதன் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
5.மேலை நாடுகளோடு ஒப்பிட்டால் இந்தியாவில் இதன் பாதிப்பு குறைவு என்றாலும், சமீபத்திய தவறான உணவு பழக்கத்தால் நாளுக்கு நாள் இதன் பாதிப்பு அதிகரித்து வருவது கவலையளிக்கிறது .
6.நிலக்கடலை ஒவ்வாமை இருப்பது தெரிந்தால் அதனை உங்கள் குடும்பத்தினரின் மருத்துவக்குறிப்பேடுகள் , குடும்ப மரூத்துவரிடம் தெரியப்படுத்த வேண்டும். வருமுன் காப்பது தான் சாலச்சிறந்தது.
7.நிலக்கடலையால் உடலில் ஏற்படும் ஒவ்வாமை சமயங்களில் உயிரைப் பறிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர் .