பொதுவாக பிள்ளையைவிட இளநீர் நமக்கு நன்மைகள் செய்யும் என்பதைத்தான் ஒரு சினிமா பாடல் சுட்டி காட்டுகிறது .இப்பதிவில் நாம் தேங்காய் நீர் நம் உடலுக்கு செய்யும் நன்மை பற்றி காணலாம்
1.தேங்காய் நீரை குடித்தால் நெஞ்செரிச்சல் முதல் அல்சர் வரை குணமாகும் .மேலும் இதில் கலோரிகள் குறைவு என்பதால் உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்கும்
2. தேங்காய் நீரை பருகுவது சோர்வு மற்றும் வறட்சியில் இருந்து மீட்கிறது. இதன் மூலம் உடல் நிலை சமன்நிலை அடைந்து இயல்பு நிலைக்கு திரும்பும்.
3. சருமத்திற்கு வயதாவதால் வரும் தோல் சுருக்கம் போன்றவற்றை தடுக்கும் குணங்கள் தேங்காய் நீருக்கு உள்ளது.
4.. தேங்காய் நீர் உடலின் பளபளப்பை மீட்டு தருகிறது.
5.தேங்காய் நீரில் அதிக ஊட்டச்சத்துகள் உள்ளதால் தோல் அரிப்பு அல்லது தோல் தொற்றுகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கும்.
6.தேங்காய் நீரால் எலும்புகள் திடமாகவும் வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
7. தேங்காய் நீரை நீரழிவு நோயாளிகளும் பருகி பலன் அடையலாம்.