பொதுவாக இந்த அவசரமான பாஸ்ட் புட் உலகத்தில் நாம் மறந்து போனது நம் முன்னோர்கள் சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்ந்த முளை கட்டிய தானிய வகைகள் .இந்த முளை கட்டிய தானிய வகையின் நன்மை பற்றி நாம் காணலாம்
1.இந்த முளை கட்டிய கோதுமை சாப்பிட்டால் புற்றுநோய் தாக்கத்தை மிகவும் குறைக்க முடியும். 2.முளைவிட்ட எள்ளு சாப்பிட்டால் ஒல்லியாக இருப்பவர்கள் உடல் பருமன் அதிகரிக்க மிகவும் உதவியாக இருக்கும்.
3.முளை விட்ட பச்சை பயறு சாப்பிட்டால் சுகர் கண்ட்ரோலாக இருக்கும் .மேலும் இதன் நன்மைகளை பார்க்கலாம்
4.தானியங்கள் முளைக்கும் போது அதன் சத்துக்கள் இரட்டிப்பாகும்.
5.இதன் மூலம் புரதம், கால்சியம், சோடியம், இரும்புத்தாது, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவை கூடுதலாக கிடைப்பதுடன் வைட்டமின் ஏ, பி1 மற்றும் பி2 போன்றவையும் கிடைக்கிறது.
6.முளைவிட்ட பச்சைப்பயிறு , வெந்தயம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.
7.முளைவிட்ட கறுப்பு உளுந்து சாப்பிட்டால் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும்
8.முளைவிட்ட கொண்டைக்கடலையை விளையாட்டு வீரர்கள் மற்றும் கடினமான உடல் உழைப்பாளிகள் நிறைய சாப்பிடலாம்