பிறப்பு சான்றிதழ் பெறுவது ரொம்ப ஈஸி.. சிம்பிளான வழிமுறை!
Dinamaalai March 30, 2025 11:48 AM

இந்தியா முழுவதும் பிறப்பு இறப்பை உடனடியாக பதிவு செய்ய வேண்டியது கட்டாயம்.  எந்த இடத்தில் அரசு சான்றிதழ் பெற வேண்டும் என்றாலும் அதற்கு முதலில் பிறப்பு சான்றிதழ் தான் அவசியம்.

  மேலும் ஒரு குழந்தையின் பிறப்பை பதிவு செய்யும் முறையையும், அதோடு அதனை சான்றிதழ் வடிவில் பெரும் முறையையும் அரசு தற்போது எளிமையாக மாற்றி இருக்கிறது.  அதன்படி   அ.ரசு இதற்காக https://www.crstn.org/birth_death_tn/ என்ற இணையதள பக்கத்தை உருவாக்கி இருக்கிறது. இந்த இணையதளத்தில் குழந்தை பிறந்த இடம், பெற்றோர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண் போன்ற தகவல்களை கொடுக்க வேண்டும்.   

குழந்தையின் பெயர் இல்லாமல் கூட பதிவு செய்து கொள்ளலாம். அதன் பிறகு ஒரு வருடத்திற்குள் குழந்தையின் பெயரை அதில் இணைத்து விட வேண்டும் என்பது கட்டாயம். இல்லையெனில்  ரூ200  கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.