மிஸ் பண்ணாதீங்க... நாளை கடைசி தேதி... என்சிஇடி தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது?!
Dinamaalai March 30, 2025 11:48 AM

ஏற்கெனவே கடைசி தேதி முடிவடைந்த நிலையில், வரும் மார்ச் 31ம் தேதி வரை ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் படிப்புக்கான என்சிஇடி நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரை விண்ணப்பிக்காதவர்கள், மறந்துடாம உடனடியாக இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கோங்க.

நம் நாட்டில் ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் பட்டப் படிப்புகளில் சேர தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வில் (என்சிஇடி) தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான என்சிஇடி நுழைவுத் தேர்வு கணினி வாயிலாக ஏப்ரல் 29ம் தேதி நடத்தப்படவுள்ளது. இதற்காக நாடு முழுவதும் 178 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. 


இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 20ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்த நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் மார்ச் 31ம் தேதி இரவு 9 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் https://exams.nta.ac.in/NCET/ எனும் வலைத்தளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்.

ஹால்டிக்கெட் வெளியீடு உட்பட கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது ncet@nta.ac.in மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

 

 

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.