அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் டெல்லிக்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இருவருக்கும் இடையேயான பேச்சு வார்த்தை ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லிக்கு சென்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார்.
அவர் அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்ததாக தகவல் வெளியானது. இதற்கிடையே பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் டெல்லிக்கு சென்றார். இதனால் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைக்குமா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் வருகிற 6-ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் மோடியை மதுரை விமான நிலையத்தில் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அதிமுக- பாஜக கூட்டணி பேச்சு வார்த்தை நடந்து வருவதாக அமைச்சர் அமித்ஷா பகிரங்கமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கதாகும்.