பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கையில், "தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.
1) மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில், நமது மாண்புமிகு பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் சீரிய தலைமையின் கீழ், MGNREGA நூறு நாள் வேலைத் திட்டத்திற்காக, தமிழகத்துக்கு வரலாற்றிலேயே அதிகமாக, ₹39,339 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளின் வலையில் நீங்கள் சிக்கியிருப்பதால், தமிழகத்தில் இந்தத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள பரவலான ஊழலை விசாரிக்க சிபிஐ விசாரணைக்கு நீங்கள் ஒப்புதல் அளிப்பீர்களா முக ஸ்டாலின் அவர்களே?
இந்த ஊழலின் அளவைப் பொதுமக்கள் புரிந்துகொள்ள, ஒரு கிராமத்தை மட்டும் மேற்கோள் காட்டியிருக்கிறோம்.
2) தமிழகத்தை விட மூன்றிலிருந்து ஐந்து மடங்கு அதிகமான கிராமப்புற மக்கள்தொகை கொண்ட மாநிலங்கள், MGNREGA நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ், தமிழகத்தை விடக் குறைவான நிதியைப் பெற்றுள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?
3) MGNREGA நூறு நாள் வேலைத் திட்டத்தின் வேலை நாட்களை, 100லிருந்து 150 ஆக உயர்த்துவதாக நீங்கள் கூறிய தேர்தல் வாக்குறுதியை எப்போது நிறைவேற்றப் போகிறீர்கள்?
முக ஸ்டாலின் அவர்களே. கடின உழைப்பாளிகளான தமிழக மக்களுக்குச் சேர வேண்டிய நிதியைக் கொள்ளையடித்துள்ள உங்கள் கட்சி திமுக, வெறும் ஊழல் கட்சி மட்டுமல்ல; அது மோசடியான, இரக்கமற்ற, பிரிவினையைத் தூண்டும் கட்சி" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.