அரியலூர் மாவட்ட த்தில் வசித்து வந்த மாற்றுத்திறனாளி ஒருவரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மாற்றுத்திறனாளி ஒருவரிடம் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரை தவறாக பயன்படுத்தி அரசு வேலை பெற்று தருவதாக கூறி பெண் ஒருவர் மோசடி செய்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மாற்றுத்திறனாளி காவல்தநிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வித்யா என்ற பெண் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து காவல் துறையினர் வித்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதுபோன்ற மோசடிகளிருந்து தப்பிக்க ஒருபோதும் வேலைக்கு பணம் செலுத்துவோ அல்லது நம்ம தகாத ஆதாரங்களுக்கு தனிப்பட்ட தகவல்களை வழங்கவோ வேண்டாம் என காவல்துறையினர் தரப்பில் எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.