தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை தமன்னா. இவரை ரசிகர்கள் செல்லமாக மில்க் ப்யூட்டி என்றுதான் அழைப்பார்கள். தளதளவென மேனியுடன் பார்த்ததும் ரசிக்கிற முகம் தமன்னா. தமிழில் கல்லூரி என்ற படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா தொடர்ந்து படிக்காதவன், சுறா என பெரிய பெரிய முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடிக்க தொடங்கினார்.
அஜித் , விஜய், சூர்யா, கார்த்தி என அனைத்து நடிகர்களுடனும் சேர்ந்து நடித்து ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறினார் தமன்னா. இடையில் இவருக்கு தமிழில் வாய்ப்புகள் குறைய தொடங்க பாலிவுட் பக்கம் சென்றார். அங்கு பல விளம்பர படங்களிலும் ஒரு சில படங்களில் ஐட்டம் ஆடலுக்கும் ஆடி ரசிகர்களை ஈர்த்தார். நடிகர் விஜய் வர்மாவுடன் தொடர்ந்து காதல் கிசுகிசுவில் சிக்கினார்.
ஆனால் இருவருக்கும் பிரேக் அப் ஆனதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த நிலையில் ஒதிலே என்ற படத்தில் சிவசக்தியாக நடித்திருக்கிறார் தமன்னா. இந்தப் படம் ஏப்ரல் 17 ஆம் தேதி ரிலீஸாக இருக்கின்றது. இந்த நிலையில் படத்தின் புரோமோஷனில் கலந்து கொண்டு பேசிய தமன்னாவிடம் பெண் நிருபர் ஒருவர் ‘மில்க் ப்யூட்டியாக இருந்த தமன்னாவை எப்படி சிவசக்தியா பார்த்தீங்க’ என படத்தின் இயக்குனரிடம் கேட்டார்.
இயக்குனர் பதில் சொல்வதற்கு முன் தமன்னா குறுக்கிட்டு ‘எப்படி இந்த கேள்வியை கேட்குறீங்க? நீங்களும் பெண் தானே? ஏன் மில்க் ப்யூட்டியாக இருந்து சிவசக்தியா நடிக்க கூடாதா? உங்க கேள்வியிலேயே பதில் இருக்கிறது. அவர் என்னை மில்க் ப்யூட்டியாகவோ தப்பாகவோ பார்க்கவில்லை. ஒரு பெண்ணோட கவர்ச்சி கொண்டாடப்படவேண்டியது. கண்டிப்பாக பெண்கள் கொண்டாடணும்’
நாம நாமளே கொண்டாடலைனா மத்தவங்க எப்படி கொண்டாடுவாங்க? இவர் பெண்களை தெய்வமாகத்தான் பார்த்தாரு. தெய்வர் கவர்ச்சியா இருக்கலாம். தெய்வம் கொல்லக் கூடியதாக இருக்கலாம். தெய்வம் சக்தி வாய்ந்ததாக இருக்கலாம். அதாவது பெண்கள் எப்படியாவது இருக்கலாம் என அந்த பெண் நிருபர் கேட்ட கேள்விக்கு சரமாரியாக பதிலை கூறினார் தமன்னா.