எல்லாம் போச்சே….! புறப்பட்ட 40 வினாடிகளில் வெடித்து சிதறிய ராக்கெட்…. அதிர்ச்சியூட்டும் வைரல் வீடியோ….!!
SeithiSolai Tamil April 01, 2025 01:48 AM

ஜெர்மனியைச் சேர்ந்த இசார் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் ‘ஸ்பெக்ட்ரம்’ ராக்கெட், நார்வேயின் ஆர்க்டிக் பகுதியில் உள்ள ஆண்டோயா விண்வெளி நிலையத்தில் இருந்து ஏவப்பட்டது. ஆனால் 40 வினாடிகள் கழித்து, ராக்கெட்டில் இருந்து புகை வெளியேறி பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இந்த வரலாற்று முக்கியத்துவம் கொண்ட முயற்சி, ஐரோப்பா தானாகவே தன்னிச்சையான செயற்கைக்கோள் ஏவல் திறன்களை வளர்த்துக்கொள்வது குறித்த நோக்கத்தோடு செய்யப்பட்ட பரிசோதனையாகும். ராக்கெட்டில் எந்தவிதமான பொருளும் ஏற்றவில்லை. இப்பரிசோதனை இயந்திர அமைப்புகளின் ஒருங்கிணைப்பு மற்றும் செயல்திறனை மதிப்பீடு செய்யும் நோக்கத்துடன் நடைபெற்றது.

ஐரோப்பிய நாடுகள் இதுவரை ரஷ்ய விண்வெளி நிலையங்களை நம்பியிருந்த நிலையில், உக்ரைனில் ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பிறகு, விண்வெளி துறையில் முன்னேற வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்துள்ளது. இதில் தோல்வி அடைந்தாலும், பெறப்பட்ட தரவுகள் எதிர்காலத்தில் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு உதவும் என இசார் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.