#featured_image %name%
ஐ.பி.எல் 2025 – லக்னோ vs பஞ்சாப் – லக்னோ – 01.04.2025
பஞ்சாப் அணி அபார வெற்றிமுனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை (171/7, நிக்கோலஸ் பூரன் 44, ஆயுஷ் பதோனி 41, எய்டன் மர்க்ரம் 28, அப்துல் சமத் 27, டேவிட் மில்லர் 19, அர்ஷதீப் சிங் 3/43, ஃபெர்கூசன், மேக்ஸ்வெல், ஜேன்சன், சாஹல் தலா ஒரு விக்கட்) பஞ்சாப் கிங்க்ஸ் அணி (16.2 ஓவரில் 177/2, ப்ரப்சிம்ரன் சிங் 69, ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 52, நெஹல் வதேரா ஆட்டமிழக்காமல் 43, திக்வேஷ் ரதி 2/30) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவா தலையா வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. லக்னோ அணியின் தொடக்க வீரர் மிட்சல் மார்ஷ் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அவரோடு களமிறங்கிய எய்டன் மர்க்ரம் (18 பந்துகளில் 28 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் மூன்றாவதாகக் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் (30 பந்துகளில் 44 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் சிறப்பாக ஆடினர். ரிஷப் பந்த் (2 ரன்) இன்று சரியாக விளையாடவில்லை.
ஆயுஷ் பதோனி (33 பந்துகளில் 41 ரன், 1 ஃபோர், 3 சிக்சர்), டேவிட் மில்லர் (18 பந்துகளில் 19 ரன்), அப்துல் சமத் (12 பந்துகளில் 27 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) ஆகியொரும் சிறப்பாக ஆடினர். இதனால் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கட் இழப்பிற்கு 171 ரன் எடுத்தது..
172 ரன் என்ற வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாக ஆடவந்த பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் ப்ரியன்ஷ் ஆர்யா (9 பந்துகளில் 8 ரன்) எடுத்து ஆட்டமிழந்தார். அவரோடு களமிறங்கிய ப்ரப் சிம்ரன் சிங் (34 பந்துகளில் 69 ரன், 9 ஃபோர், 3 சிக்சர்) அடித்தார்.
அவரோடு இணைந்து விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் (30 பந்துகளில் 52 ரன், 3 ஃபோர், 4 சிக்சர்) அவருக்குப் பின் வந்த நெஹல் வதேரா (25 பந்துகளில் 43 ரன், 3ஃபோர், 4 சிக்சர்) ஆகியோரின் அதிரடியாக ஆடியதால் பஞ்சாப் அணி 16.2 ஓவர்களிலேயே இரண்டு விக்கட் இழப்பிற்கு 177 ரன் எடுத்து 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
பஞ்சாப் அணியின் மட்டையாளர் ப்ரப் சிம்ரன் சிங் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
News First Appeared in