அரசு மற்றும் தனியார் ஊழியர் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அந்தந்த நிறுவனங்கள் சார்பாக பிஎப் கணக்கு தொடங்கப்பட்டு மாத சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட தொகையில் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த தொகையானது அவர்கள் பெரும் ஊதியத்தை பொறுத்து இருக்கும். இந்த தொகை பணிக்காலம் நிறைவடைந்த பிறகு மொத்தமாக நமக்கு திரும்ப கிடைக்கும். தற்போது தேவைக்கு ஏற்ப தொகையை பணி காலத்திலேயே எடுத்துக்கொள்ளும் வசதியும் உள்ளது. ஆனாலும் இந்த தொகையை முழுவதுமாக எடுத்தால் மட்டும் தான் அது ஊழியர்களுக்கு வசதியாக இருக்கும்.
இந்த நிலையில் EPFO அமைப்பு அவ்வப்போது பிஎஃப் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் பிஎப் அலுவலகத்திற்கு செல்லாமலேயே வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து ஒரு லட்சம் ரூபாய் வரை முன்பணம் பெரும் புதிய நடைமுறை அமலுக்கு வந்தது. விண்ணப்பிக்கும் தொகை 50,000 குறைவாக இருந்தால் ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் உடனே அப்ரூவல் கிடைத்துவிடும். இந்த நடைமுறை மேலும் Upgrade செய்யப்பட்டு முன் பணம் கூடுதலாகவும், விரைவாகவும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. முன்பணம் பெறுவதற்கான உச்சவரம்பு ஒரு லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது,