எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மக்களவையில் வக்ஃபு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்ட போது எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்த நிலையில், மறுபரிசீலனைக்காக நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. கூட்டுக்குழுவில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த திருத்தங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில், பாஜக கூட்டணி கட்சிகள் முன்வைத்த 14 திருத்தங்கள் மட்டும் ஏற்கப்பட்டன. இதனிடையே எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 288 உறுப்பினர்களும், எதிராக 232 பேரும் வாக்களித்தனர். மசோதா மீது நள்ளிரவு வரை 12 மணி நேரத்திற்கும் மேலாக காரசார விவாதம் நடந்தது. வக்ஃப் சொத்துக்களை அபகரிக்க ஒன்றிய அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமைகாக குற்றம் சாட்டினர்.