யாராச்சும் வேலை கொடுங்க... தனக்குத்தானே இரங்கல் போஸ்டர் வெளியிட்ட இளைஞர்!
Dinamaalai April 05, 2025 03:48 AM

இந்தியா முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் பலர் விரக்தியாகி விபரீத முடிவுகளுக்கு சென்று விடுகின்றனர். அந்த வகையில் பெங்களூரில் வசித்து வரும் இளைஞர்  பிரசாந்த் ஹரிதாஸ் . இவர்  LinkedIn ஆப்பில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை தேடி கொண்டே இருந்தார்.  தொடர்ந்து வேலையில்லாமல் திண்டாடி பலமுறை நிர்வாகிகளிடமும், நிறுவனங்களிடமும் தொடர்ச்சியாக நிராகரிப்பு மற்றும் சரியான பதில் கிடைக்காமல் பல இன்னல்களை சந்தித்துள்ளார்.
அதனால் மன உளைச்சலுக்கு ஆளான இவர் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில்  வேலைவாய்ப்பு தேடி வந்த LinkedIn செயலியில் தனது மரண அறிவிப்பு  பதிவை வெளியிட்டுள்ளார்.


அந்த பதிவில் அவரது புகைப்படத்தில் மீது “Rest In Peace “என்று எழுதியுள்ளார். அத்துடன் தன்னை வேலைக்கு ஏற்க மறுத்த தொழில் உலகையும் தான் வேலைக்காக செய்த முயற்சிகளையும்   கூறியிருந்தார். அத்துடன்  இந்த செயல் தன்னுடைய வாழ்க்கையை முடிக்க நினைத்து செய்தது அல்ல.  வேலையை தேடி தேடி சலித்து மனம் உடைந்த நிலையில் தன்னுடைய சோகத்தை வெளிப்படுத்துவது மட்டுமே எனவும் பதிவிட்டுள்ளார். அதில்  “நான் தற்கொலை செய்யப் போவதில்லை ஆனால் 3 ஆண்டுகளாக வேலையில்லாமல் தவித்து வந்ததாகவும், இந்த உலகத்தில் வாழ தனக்கு இன்னும் அத்தியாவசியங்கள் இருக்கின்றன” எனவும்  உருக்கமாக பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவு சமூக வலைதளங்களில்  வைரலான நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து வேலை வாய்ப்புகள் மற்றும் நெட்வொர்க் லிங்குகளை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். இவரது  செயல் இன்றைய வேலை சந்தையின் கடுமையான உண்மைகளை வெளிப்படுத்துவதாக இருக்கிறது என நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.