வருகிறது AI காண்டம்ஸ்… சமூக வலைதளத்தில் புயலைக் கிளப்பிய நிறுவனம்… கடைசியில் வச்ச டுவிஸ்ட்… வீடியோ வைரல்..!!
SeithiSolai Tamil April 05, 2025 05:48 AM

இன்றைய காலகட்டத்தில் ஏஐ தொழில்நுட்பம் என்பது வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இனி வரும் காலகட்டங்களில் ஏஐ தெரிந்தவர்களுக்கு தான் வேலை என்ற நிலை கூட உருவாகளாம். இந்த ஏஐ தொழில்நுட்பம் பல்வேறு விதமான வேலைகளை செய்யும் நிலையில் தற்போது ஒரு பிரபல நிறுவனம் இதில் காண்டமை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் அவர்கள் ஏப்ரல் மாதத்தை முன்னிட்டு வெறும் நகைச்சுவையாக இந்த செயலை செய்துள்ளனர். இதில் உண்மை கிடையாது. மேலும் எதிர்காலத்தில் வேண்டுமானால் இது உருவாகலாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதாவது மன்போர்ஸ் கான்டம்ஸ் நிறுவனம், ஏப்ரல் ஃபூல்ஸ் தினத்தை முன்னிட்டு, “Dot AI” என்ற பெயரில் எதிர்கால தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட் கான்டம்ஸ் வரிசையை அறிமுகப்படுத்துவதாக விளம்பரத்தை வெளியிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த கான்டமில் ஆறாவது உணர்வின் அடிப்படையில் அதிர்வுகளை உருவாக்கும் நவீன மைக்ரோ சென்சார்கள், புள்ளிகளின் அளவை மாற்றும் நானோ சென்சார்கள், மற்றும் செயல்திறனை கண்காணிக்கும் செயலியுடன் கூடிய அம்சங்கள் உள்ளன எனக் கூறப்பட்டு, நகைச்சுவை கலந்த விளம்பர முறையில் பார்வையாளர்களை ஈர்த்தது.

இந்த அறிவிப்பு, சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி, இஸ்டாகிராமில் மட்டும் 3 கோடி பார்வைகள், 70 ஆயிரம் லைக்குகள் மற்றும் 3 லட்சம் ஷேர்களை பெற்றுள்ளது. சிலர் இதனை உண்மையான கண்டுபிடிப்பாக நம்பி தங்களை உற்சாகப்படுத்திக் கொண்டனர். ஆனால், பிறகு இது ஏப்ரல் ஃபூல்ஸ் தினத்தை கொண்டாட உருவாக்கப்பட்ட ஒரு தந்திரமான விளம்பர யுக்தி என மன்போர்ஸ் நிறுவனம் தெரிவித்து, ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்தியது.

 

 

View this post on Instagram

 

இந்த பிரச்சாரத்தின் வாயிலாக மக்களின் கவனத்தை ஈர்த்த மன்போர்ஸ் நிறுவனம், இதுவரை பல வித்தியாசமான தயாரிப்புகள் மற்றும் பிரசாரங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் தனி இடத்தை பெற்றுள்ளது. பனிக்கட்டி போல் மென்மையான கான்டம்களிலிருந்து, வித்தியாசமான ருசிக்கொண்ட கான்டம்கள் வரை பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ள மன்போர்ஸ், இந்த ஆண்டில் AI தொழில்நுட்பம் கலந்த ‘ஸ்மார்ட்’ கான்டம்களை வைத்து ஒரு பொய் விளம்பரத்தை ஏற்படுத்தி, சமூக ஊடகங்களில் புயலை கிளப்பியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.