உத்திர பிரதேசத்தில் இருக்கும் ஒரு தம்பதி, தங்களின் 25வது திருமண நாளை தட புடலாக கொண்டாட வேண்டுமென முடிவு செய்துள்ளனர். இதற்காக உறவினர்களை அழைத்து, விருந்து வைத்து, இசை, நடனம் என அனைத்திற்கும் ஏற்பாடு செய்திருக்கின்றனர். நினைத்தது போலவே, விழா களைக்கட்டியுள்ளது. கணவனும் மனைவியும் ஒன்றாக மகிழ்ச்சியாக நடனமாடி கொண்டிருந்தனர். இந்த நடனத்தின் முடிவு, ஒரு சோகத்தில் முடியும் என்பதை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
அந்த வீடியோவில், வெள்ளை கோட் அணிந்த ஒருவர், மேடையில் ஒரு பாடலுக்கு மகிழ்ச்சியாக நடனமாடுவதும், தனது மனைவியை பார்த்து சிரிப்பதும் பதிவாகியிருக்கிறது இதை ஒன்றுக்கு இரண்டு கேமாரா மேன்களும் படம் பிடிக்கின்றனர். கடைசியில் சில பெண்கள் இவர்களை சுற்றி வந்து நடனமாட, தனது நடனத்தை கொஞ்சம் மெதுவாக்கிய இவர், அனைவரையும் பார்த்து சிரித்துக்கொண்டிருக்கிறார். பின்னர், யாரும் எதிர்பாராத வண்ணம் மயங்கி கீழே விழுந்து விட்டார். சுற்றி இருக்கும் அனைவரும் அவரை தூக்குவதோடு அந்த வீடியோ முடிகிறது.
மயங்கியவரின் பெயர், வசீம் சர்வாத். இவருக்கு வயது 50. நடனத்தின் போது மயங்கிய இவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர். ஆனால், அவர் ஏற்கனவே மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக அந்த மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
மகிழ்ச்சியாக மாற வேண்டிய மணநாள் இப்படி, சோகமான நாளாக மாறியது,