தடுப்பு சுவரில் மோதிய மோட்டார் சைக்கிள்… துடிதுடித்து இறந்த கல்லூரி மாணவர்… சோகத்தில் குடும்பத்தினர்…!
SeithiSolai Tamil April 07, 2025 06:48 AM

சென்னை மாவட்டம் தரமணியில் நள்ளிரவு ஒரு மணி அளவில் தர்ஷன்(19) என்பவர் பைக்கில் சென்றுள்ளார். கல்லூரி மாணவரான இவர் ரோட்டில் யாருமில்லாததால் அதிவேகமாக சென்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதினார்.

இந்த நிலையில் தலையில் ஹெல்மெட் அணியாததால் இவருக்கு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தர்ஷனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.