கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு பெண் அதிகாலை 4:30 மணியளவில் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார். அந்தப் பெண் தன்னுடைய தோழி வீட்டில் இருந்து தன்னுடைய வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் அவரை பின்தொடர்ந்த மர்ம நபர்கள் திடீரென ஸ்கூட்டியை மறித்தனர். அவர்கள் இருவரும் நடு ரோட்டில் அந்த பெண்ணை தொட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சத்தம் போட்டு அலறிய நிலையில் உடனடியாக அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.
பொதுமக்களை பார்த்ததும் அந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் பெங்களூரில் சமீப காலமாக பாலியல் தொல்லைகள் குறித்த செய்திகள் அடிக்கடி வெளியாவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.