உன் சம்பளம் எவ்வளவு..? “அடிக்கடி கேட்டு டார்ச்சர் செய்த உறவினர்கள்”.. 6-வது மாடியில் இருந்து குதித்த Office Boy… 2 பேர் கைது..!!!
SeithiSolai Tamil April 07, 2025 01:48 PM

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பிம்ரி சின்சவத் என்ற பகுதி உள்ளது. இங்கு தேஜா பஜிராவ் என்ற 20 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஆபீஸ் பாய் ஆக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் தேஜாவிடம் அவருடைய உறவினர் நீலிஸ் சஞ்சய் (25) மற்றும் சகோதரர் மங்கேஷ் (23) ஆகியோர் சம்பளம் எவ்வளவு என தொடர்ந்து கேட்டு வந்துள்ளனர். இது தேஜாவுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியது.

இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தான் வேலை பார்க்கும் அலுவலகத்தின் ஆறாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தன்னுடைய சாவுக்கு காரணம் மேற்கண்ட இருவர்கள் தான் என்று சமூக வலைதளத்தில் வீடியோ பதிவு செய்து வைத்துள்ளார்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தற்கொலைக்கு தூண்டியதாக கருதி தற்போது அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.