மகாராஷ்டிரா மாநிலத்தின் பிம்பிரி மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு தவறுதலாக விழுந்துவிட்ட ஆணியை விழுங்கி விட்டதாக கூறி ஒரு வாலிபர் அட்மிட் ஆனார். அந்த வாலிபருக்கு ஸ்கேன் செய்த போது நுரையீரல் மற்றும் வயிறு பகுதிகளில் ஆணி இருப்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து டாக்டர்கள் ஆப்ரேஷன் செய்ய முடிவு செய்த நிலையில் கிட்டத்தட்ட 3 மணி நேரமாக அறுவை சிகிச்சை நடைபெற்றது.
இந்த அறுவை சிகிச்சையின் போது வெற்றிகரமாக 7 ஆணிகள் அகற்றப்பட்டது. அந்த வாலிபரும் நலமுடன் இருக்கிறார். மேலும் சமீபத்தில் ஒருவர் ஐந்து அடி நீளம் உள்ள தையல் ஊசியை விழுங்கிவிட்ட நிலையில் அவருக்கு மருத்துவர்கள் ஆப்ரேஷன் செய்து அந்த ஊசியை அகற்றிய நிலையில் தற்போது ஆணியை ஒருவர் விழுங்கி விட்டதாக ஆப்ரேஷன் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.