உலகளவில் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி - இந்திய பங்கு சந்தையும் கடும் சரிவு!
Top Tamil News April 07, 2025 05:48 PM

உலகளவில் பங்கு சந்தைகள் கடும் வீச்சியை சந்தித்துள்ளதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

அமெரிக்க அதிப்ர் டிரம்பின் புதிய பரஸ்பர வரிகள் உள்ளிட்ட காரணங்களால் உலக பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.  ஹாங்காங் பங்கு சந்தை 8.7% சரிந்தது. சிங்கப்பூர் பங்கு சந்தை  7% சரிந்தது. ஜப்பான் பங்கு சந்தை 6% சரிந்தது. சீனா பங்கு சந்தை 5.5% சரிந்தது. மலேசியா பங்கு சந்தை 4.2% சரிந்தது. ஆஸ்திரேலியா பங்கு சந்தை 4.1% சரிந்தது. பிலிப்பைன்ஸ் பங்கு சந்தை 4% சரிந்த நிலையில், நியூசிலாந்து பங்கு சந்தை 3.6% சரிந்தது.

இதேபோல் இந்திய பங்கு சந்தையும் கடும் சரிவை சந்தித்துள்ளது. இந்திய பங்கு சந்தைகளும் 4 சதவீதத்திற்கு மேல் சரிந்துள்ளன. தேசிய பங்கு சந்தை நிஃப்டி ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது. மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் மூன்றாயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது. இந்திய பங்கு சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளதால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர். 


 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.