“விவசாய நிலத்திற்கு தாத்தா-பாட்டியோடு சென்ற பேர குழந்தைகள்”… வேலி அருகே இருந்த மின்கம்பம்… 3 பேர் துடிதுடித்து பலி… நாமக்கல்லில் அதிர்ச்சி..!!!
SeithiSolai Tamil April 08, 2025 01:48 PM

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆண்டர்புரம் கிராமத்தில் விவசாயியான செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவி மற்றும் 2 பேரக்குழந்தைகளுடன் நேற்று விவசாய நிலத்திற்கு சென்றார். அவர்களுடைய நிலத்தின் அருகே ஒரு வேலி இருந்த நிலையில் அதன் அருகில் மின்கம்பமும் இருந்தது. அப்போது மின்சாரம் திடீரென வேலியின் மீது பாய்ந்தது. இதனை அறியாமல் செல்வத்தின் மனைவி அதன் மீது கை வைத்த நிலையில் வலியால் அலறினார்.

அப்போது பேரக் குழந்தைகளும் தங்கள் பாட்டியை தொட்டனர். இதனால் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தைகள் சுஜித், ஐவழி மற்றும் அவர்களின் பாட்டி ஆகியோரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.