“மகளுடன் விமானத்தில் சென்ற பெண்….” இந்திய வம்சாவளியை சேர்ந்த வாலிபர் செய்த காரியம்…. அதிர்ச்சி சம்பவம்….!!
SeithiSolai Tamil April 08, 2025 06:48 PM

அமெரிக்கா செல்லும் விமானத்தில் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இந்திய வம்சாவளியையுடைய பவேஷ்குமார் தஹ்யாபாய் ஷுக்லா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி 26ஆம் தேதி மொண்டானா மாநிலத்தின் பெல்கிரேட்டிலிருந்து டெக்சாஸ் மாநில டல்லாஸ் நகருக்கு சென்ற விமானப் பயணத்தின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

பெண்ணை தவறாக தொட முயன்றதாக, அதைப் பற்றிய தகவலை பாதிக்கப்பட்ட பெண் தனது கணவனுக்கு மெசேஜ் அனுப்பியதும், அவர் FBI மற்றும் விமான நிலைய போலீசாரை தொடர்பு கொண்டுள்ளார்.

அதன்பின் விமானம் தரையிறங்கியவுடன், ஷுக்லா கைது செய்யப்பட்டார். FBI சிறப்பு அதிகாரி சாட் மெக்நிவென் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதின்முறை அறிக்கையில், அந்த நபர் பெண்ணை தகாத முறையில் தொட்டுள்ளார்.

இந்த சம்பவம் விமானத்தில் இருந்த மற்றொரு பயணியால் உறுதிப்படுத்தப்பட்டது என்றும் FBI கூறியுள்ளது. தற்போது, 36 வயதான ஷுக்லா நியூ ஜெர்சியில் கைது செய்யப்பட்ட நிலையில், ஏப்ரல் 17ஆம் தேதி மொண்டானா கூட்டாட்சி நீதிமன்றத்தில் அவர் ஆஜராக உள்ளார்.

விசாரணையின் போது, ஷுக்லா “தமக்குத் ஆங்கிலம் தெரியாது” என்று கூறியிருந்தாலும், பெண்ணுடனும், அவரது மகளுடனும் ஆங்கிலத்தில் பேசியதாக சாட்சியம் வழங்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.