“மூதாட்டி மீது கல்லை தூக்கி எறிந்த பெண்”… உடனே கிடைத்த நீதி… இதுதான் சரியான தண்டனை… நல்ல வேணும்… வைரலாகும் வீடியோ..!!!
SeithiSolai Tamil April 17, 2025 03:48 AM

ஒரு வயதான பெண்ணை கல்லால் தாக்க முயற்சிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு பெண் மது போதையில் இருப்பது போல தெரிகிறது. அவர் தெருவில் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொள்வது. அப்பகுதியில் செல்லும் மக்களின் மீது கற்களை எறிவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் அந்தப் பெண் தெருவில் சென்று கொண்டிருந்த வயதான பெண்ணை குறி வைத்து கல்லை எறிகிறார். முதலில் கல் தவறி விழுந்த போதும் இரண்டாவது கல்லை நேரடியாக அந்தப் பாட்டியின் மீது எறிந்து விட்டு வருகிறார். அதன் பின்னர் அந்த இடத்திற்கு வரும் மற்றொரு நபரின் மீது கல்லை எறிய முயற்சிக்கும்போது அந்த நபர் வேகமாக வந்து அந்த பெண்ணை பிடித்து இழுத்து கீழே தள்ளுகிறார்.

உடனே அந்தப் பெண் நிலை தடுமாறி அருகில் உள்ள ஒரு குழாயின் மீது இடித்து கீழே விழுகிறார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் கோடிக்கணக்கான பார்வையாளர்களை கடந்து வருகிறது. இந்த வீடியோவை WWE பாணியில் எடிட் செய்து பதிவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோவிற்கு பலரும் கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.