இங்கிலாந்தில் உள்ள டில்லி என்ற 19 வயதான பெண் தனது குழந்தை பருவத்திலேயே மெனிஞ்சைடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு தனது இரு கைகளையும் இழந்துள்ளார். இவருக்கு தற்போது உலகின் முன்னணி தொழில்நுட்பமான பயோனிக் கை பயன்படுத்தி மீண்டும் புதிய கை பொருத்தப்பட்டுள்ளது.
ஹீரோ ப்ரோ எனப்படும் இந்த புதிய பயோனிக்கை மனிதனுடைய தசை இயக்கங்களை உணர்ந்து இயக்கப்படும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த பயோனிக்கை சாதாரண கை மூளை மூலம் இயக்கப்படுவது போல, இதை மனிதர்களின் தசைகளின் சின்ன இயக்கங்களை உணர்ந்து கையை திறக்கவும், மூடவும், கிரிப் மோடுகளுக்கு மாறவும் செய்கின்றன என டில்லி தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
மேலும் அவருக்குப் பொருத்தப்பட்டுள்ள கையின் இயக்கங்களை நேரில் நிகழ்ச்சியில் காட்டியுள்ளார். அதில் டில்லி ஒரு கண்ணாடி கிண்ணத்தை தனது ஹீரோ ப்ரோ கை மூலம் மிக துல்லியமாக எடுத்துக்காட்டுகிறார். இந்த 3d பிரிண்ட் ஹீரோ ப்ரோக்கையை உடலில் உள்ள தசை மூலம் இயக்கப்படும் புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பத்தில் மிக முக்கியமானது இந்த பயோனிக்கை வயர்லெஸ் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது என்பதுதான். அதாவது கை உடலுடன் இணைக்கப்படாமல் இருந்தாலும் அதனை தன்னால் கட்டுப்படுத்த முடியும் என்பதை டில்லி அந்த நிகழ்ச்சியில் செய்து காட்டியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.