மொபைல் போன்கள் உடலின் அங்கமாக மாறும்… பாபா வாங்காவின் அதிர்ச்சியூட்டும் கணிப்பு… அடுத்தடுத்து உண்மையாகிறதா?
SeithiSolai Tamil April 19, 2025 04:48 AM

பல்கேரியாவை சேர்ந்த பெண் பார்வையற்ற தீர்க்கதரிசி பாபா வாங்கா. இவர் எதிர்கால நிகழ்வுகளை முன்கூட்டியே கணிக்கும் திறமை பெற்றவர். இவர் கணித்த கணிப்புகளில் ஒன்று 2025 இல் மொபைல் போன்கள் மனித உடலின் ஒரு பகுதியாகவே மாறும் என்பது. இக்கணிப்பு இன்றைய சூழ்நிலைகளுக்கு ஏற்ப மிகப்பெரிய உண்மையாகவே மாறி வருகிறது.

ஏனெனில் மக்கள் உறவுகளை விட மொபைல் ஃபோன்களை அதிகம் நம்பி வாழ்கின்றனர். காலையில் எழுந்ததும் மொபைல் பார்ப்பது தூங்கும்போதும் விடாத அளவிற்கு மொபைல் ஃபோன்களை பயன்படுத்துகின்றனர். இதனால் டிஜிட்டல் அடிமைத்தனம், மன அழுத்தம், தூக்கமின்மை, பார்வை கோளாறு போன்ற பல பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன.

இதேபோன்று பாபா வாங்காவின் மற்றொரு கணிப்புகளில் ஒன்று டெலிபதி மனிதர்கள் எண்ணத்தின் மூலமாகவே இயந்திரங்களை இயக்கக்கூடிய காலம் வரும் என்றும் கணித்திருந்தார். இன்று அவர் கூறியவாரே கம்ப்யூட்டர் இன்டர்பேஸ் தொழில்நுட்பங்கள் உருவாக தொடங்கியுள்ளன.

மேலும் மருத்துவத்துறைகளிலும் அவரது கணிப்பு சாத்தியமாகி வருகிறது. பாபா வாங்கா கூறியது போலவே ஆய்வகங்களில் செயற்கை உறுப்புகள் வளர்க்கும் தொழில்நுட்பம். அதாவது ஸ்டெம் செல் பாதுகாப்பு போன்றவை இன்றைய காலகட்டத்தில் வேகமாக வளர்ந்து வருகின்றன.

இதனைத் தொடர்ந்து பாபா வாங்காவின் கணிப்புகளான, வேற்றுக்கிரக வாழ்வு, ஐரோப்பாவில் போர் போன்ற பல கணிப்புகளை உலகம் தொடர்ந்து கவனித்து வருகின்றன. பாபா வாங்காவின் பல கணிப்புகள் முன்பே நிஜமாகி உள்ளதால் எதிர்காலத்தை உணர்ந்து முன்னெச்சரிக்கையாக வாழ வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.