“விலாங்கு மீனை விழுங்கிவிட்டு பறந்த பறவை”… வயிற்றை கிழித்துக்கொண்டு வெளியே வந்த அதிசயம்… அட உண்மையாவா..? நீங்களே பாருங்க..!!!
SeithiSolai Tamil April 17, 2025 03:48 AM

ஒரு பிரபல புகைப்படக் கலைஞர் ஒருவர் தனது கேமராவில் பதிவு செய்த காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்தப் புகைப்படத்தில், வானத்தில் பறக்கும் ஹெரான் என்ற ஒருவகை பறவை பறந்து கொண்டிருக்கும்போதே அந்த பறவையின் வயிற்றிலிருந்து ஒரு ஈல் வகை மீன், அதாவது விலாங்கு மீன் வெளி வருவது போல் அந்த காட்சி இருந்தது.

இதுபோன்ற காட்சியை இதுவரை யாரும் படம் பிடித்திருக்க வாய்ப்பே இல்லை. இது ஒரு அசாதாரணமான காட்சியாக இருந்தது. பொதுவாக சமூக வலைதளங்களில் ஒரு பறவை மீனை வேட்டையாடுவது போன்ற காட்சிகள் வெளிவந்திருக்கலாம். ஆனால் பறக்கும் பறவையின் வயிற்றிலிருந்து மீன் வெளியே வருவது போன்ற காட்சி சமூக வலைதளங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து பலரும் இதனை ஏதாவது கிராபிக்ஸ் எடிட்டிங் வேலையாக இருக்கும் என சந்தேகம் தெரிவித்து வருகின்றனர். இதுவரை இந்த புகைப்படம் கிட்டத்தட்ட 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து, 2.3 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.