“பெண்களை கற்பழித்து கர்ப்பமாக்கி”… தூதரகத்தில் புகார் கொடுத்தால் உடலுறவுக்கு அழைக்கும் கொடூரம்… கென்யா பெண்ணின் வேதனை பதிவு..!!
SeithiSolai Tamil April 08, 2025 08:48 PM

சவுதி அரேபியாவுக்கு, வேலைக்காக கென்யாவைச் சேர்ந்த சில பெண்கள் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் கடுமையான பாலியல் மற்றும் உடல் வன்முறைக்கு ஆளாகி பெண்கள் கர்ப்பமாக்கி விடுவதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து கென்யா தூதரகத்தில் உதவி கேட்ட போதும் அவர்கள், மேலும் தவறாக பயன்படுத்தியதாக வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜெலஸ்டின் கேமோலி என்ற பெண் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு மற்றும் காயங்கள் குறித்து ரியாத்தில் உள்ள கென்யா தூதரகத்தில் உதவி கேட்டுள்ளார்.

 

 

View this post on Instagram

 

அப்போது தொழிலாளர் அதிகாரி ராபின்சன் ஜுமா ட்வாங்கா, அவரிடம் உடலுறவு கொண்டால் தான் உதவி செய்வேன் என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்த கென்யா அரசாங்கம் மற்றும் வெளியுறவுத்துறை இதுவரை எந்த முறையான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜனாதிபதி வில்லியம் ரூட்டோவின் பேச்சாளர் இந்த புகாரை பற்றி அறியவில்லை என்று கூறியிருந்தாலும் பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலங்கள் மற்றும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், இந்த அமைப்புசார் கொடுமைகளை வெளிப்படுத்துகின்றன.

இன்னும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்து வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.