Breaking: ஆளுநர் நிறுத்தி வைத்த 10 மசோதாக்களுக்கும் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் வழங்கியது உச்சநீதிமன்றம்…!!!
SeithiSolai Tamil April 08, 2025 11:48 PM

தமிழக ஆளுநர் ரவி தொடர்ந்து அரசுக்கு எதிராக செயல்பட்டு வருவதோடு சட்டசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கில் விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது.

அதன்படி தற்போது ஆளுநருக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கை நீதிபதிகள் ஆர். பர்பி வாடா மற்றும் மகாதேவன் அடங்கிய அமர்வு விசாரிக்கிறது. இந்நிலையில் இந்த வழக்கில் ஆளுநருக்கு என்ற தனியாக அதிகாரம் கிடையாது. 2-வது முறையாக நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தது சட்ட விரோதம்.

மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பிய ஆளுநரின் செயல்பாடுகள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. ஆளுநரின் செயல்பாடுகள் என்பது அரசியலமைப்பு சட்டப்படி வரையறுக்கப்பட்ட நோக்கத்திற்கு எதிராக இருக்கிறது. அதன் பிறகு குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்ட மசோதாக்கள் செல்லாது.

சட்டப்பேரவையில் மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்படும் நாளிலேயே ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும். ஒப்புதல் வழங்குவது மற்றும் ஒப்புதலை நிறுத்தி வைப்பது உள்ளிட்ட பிரிவுகளை முக்கியமாக கருத வேண்டும். ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது மாநில அரசின் பரிந்துரையின் படி தான் செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் தற்போது ஆளுநர் நிறுத்தி வைத்த 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் தங்களுடைய சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் வழங்குவதாக அதிரடியாக அறிவித்துள்ளது. அதன்படி உச்ச நீதிமன்றங்களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டம் 142 இன் படி உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும் இதை விட்டால் வேறு வழி தெரியவில்லை எனக்கூறி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.