“ப்ளீஸ் அம்மா என்ன விட்ருங்க”… கதறி அழுதும் மனம் இறங்காத தாய்… 7 வயது மகளை கழிவு நீர் தொட்டியில் மூழ்கடித்து… பதைபதைக்க வைக்கும் சம்பவம்..
SeithiSolai Tamil April 17, 2025 01:48 PM

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் 7 வயதுச் சிறுமியான ரெபெக்கா காஸ்டலானோஸ் தனது தாயால் கழிவுநீர்த் தொட்டியில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்ட கோர சம்பவம் அனைத்து இடங்களிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏப்ரல் 11ஆம் தேதி மாலை 5:40 மணியளவில் அந்த அபார்ட்மெண்டில், மயக்க நிலையில் கிடந்த ரெபெக்காவை மீட்ட மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இருப்பினும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

அக்கழிவுநீர்த் தொட்டியில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட ரெபெக்கா இறப்பதற்கு முன்னதாக “அம்மா தயவுசெய்து வேண்டாம்” என கதறியதை அண்டை வீட்டு வாசிகள் கேட்டதாக தெரிவித்துள்ளனர்.

மரணத்திற்கு பிறகு நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்வில், ரெபெக்கா கழுத்தை நெரித்தும், தண்ணீரில் மூழ்கடித்தும் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இதையடுத்து அவரது தாய், 37 வயதான கார்சியா காஸ்டலானோஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவருடன் நிச்சயதார்த்தம் ஆன நபர் கூற்றுப்படி, கார்சியா மன அழுத்தத்தில் இருந்து உள்ளார். அவர் சிறந்த அம்மா மகளிடம் எப்போதும் அன்பாக பழகுவார் என்று அவர் தெரிவித்தார். நாங்கள் இன்னும் 2 மாதங்களில் திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்தோம். அதன்படி ரெபேக்காவை என் மகளாக சட்டபூர்வமாக தத்தெடுத்திருந்தேன்.

ஆனால் அதற்குள் இப்படி நடந்து விட்டது என்று அவர் தெரிவித்தார். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார்சியா தற்போது 2 மில்லியன் பிணை தொகையுடன் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.