ஆணுடன் கடும் வாக்குவாதம்… ஆக்ரோஷத்தில் கடையின் கண்ணாடியை தலையால் உடைத்த பெண்… அதிர்ச்சி வீடியோ..!!
SeithiSolai Tamil April 08, 2025 11:48 PM

சமூக வலைதளங்களில் தீவிரமாக வைரலாகும் ஒரு சிசிடிவி வீடியோ, பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில், ஒரு பெண் மற்றும் ஆண் இடையே நடக்கும் கடுமையான வாக்குவாதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருவரும் சாலையில் வாதாடிக் கொண்டிருக்கும் நிலையில், திடீரென அந்த பெண் கடையின் கண்ணாடியை தலையை கொண்டு வேகமாக மோதுகிறார். முதலில் கண்ணாடி உடையவில்லை, ஆனால் இரண்டாவது முறை அதிக ஆவேசத்துடன் மோதியதும், பெண்ணின் தலை நேராக கண்ணாடியை உடைத்து உள்ளே பாய்ந்தது.

 

இந்த சம்பவத்தால் கடை முழுவதும் கண்ணாடித் துண்டுகள் பறந்துள்ளன. அதிர்ச்சியில் அந்த ஆண் சில விநாடிகளில் அங்கிருந்து தப்பி ஓடினார். அதே நேரத்தில், கடைக்குள் விழுந்த அந்த பெண், அவரே எழுந்து, உடனே உடைந்து போன கதவிலிருந்து வெளியே வந்திருக்கிறார்.

சமூக வலைதளங்களில் இதைப் பார்த்த நெட்டிசன்கள், இது திட்டமிட்டு செய்த செயலா, அல்லது மன உளைச்சலால் நடந்த விபரீதமா என விவாதிக்கின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.