வீடியோ : அடித்து நொறுக்கப்பட்ட பாட்டா, KFC, பீட்ஸா ஹட்..!! “வங்கதேசத்தில் வெடித்த போராட்டம்” இதுவரை 49 பேர் கைது..!!
SeithiSolai Tamil April 08, 2025 11:48 PM

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் மேற்கொண்ட கொடூரத் தாக்குதல்களை கண்டித்தும், இஸ்ரேலிய தயாரிப்புகளுக்கு புறக்கணிப்பு கோரியும் வங்கதேசத்தின் பல நகரங்களில் திங்கட்கிழமை தீவிர எதிர்ப்புப் போராட்டங்கள் வெடித்தன.

குறிப்பாக போக்ரா நகரில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பேரணியாகச் சென்று, நகரத்தின் மையப் பகுதியில் உள்ள பாட்டா ஷோரூமை கண்ணாடி சுவர்களுடன் உடைத்து தாக்கினர். மாணவர்கள் கல்வி நிறுவனங்களிலிருந்து நடத்திய இந்தப் பேரணியில் ‘பாலஸ்தீன மக்களுக்கு நீதி வேண்டும்’ எனக் கோஷமிட்டபடி மக்கள் கலந்து கொண்டனர்.

“>

 

சிலெட்டில், மிர்போக்ஸ்துலா பகுதியில் உள்ள KFC உணவகம் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்ரேலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் குளிர்பானங்கள் உடைக்கப்பட்டது . போராட்டத்துக்குப் பின்னர் உணவகம் உடனடியாக மூடப்பட்டது; போலீசார் விரைந்து சென்று நிலையை கட்டுப்படுத்தினர். இதேபோன்று, காக்ஸ் பசார் நகரின் கலாடலி பகுதியில் KFC மற்றும் பீட்ஸா ஹட் பெயர்ப் பலகைகளில் கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், உணவகத்துக்குள் உடைப்பு எதுவும் இல்லை என்றும், வெளியே சிறிய சேதமே நடந்ததாக தெரிவித்தனர். வங்கதேசம் முழுவதும் கடைகளின் மீது தாக்குதல் நடத்தியதற்காக இதுவரை 49 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.”

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.