வீட்டுக்குள் பயங்கர துர்நாற்றம்… “போர்வையில் சுற்றியபடி தாய்-மகளின் அழுகிய சடலம்”… காணாமல் போன கணவன்… பரபரப்பு சம்பவம்..!
SeithiSolai Tamil April 10, 2025 01:48 PM

உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஒரு பகுதியில் ஷபீனா என்ற 40 வயது பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு 9 வயதில் இனயா என்ற ஒரு மகள் இருந்துள்ளார். இவர்கள் வீடு பூட்டப்பட்ட நிலையில் கிடந்த நிலையில் திடீரென அந்த வீட்டுக்குள் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசியுள்ளது.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் வீட்டை திறந்து பார்த்தபோது ஒரு போர்வையில் சுற்றியபடி தாய் மற்றும் மகள் இருவரும் சடலமாக கிடந்தனர். இருவரின் சடலங்களும் அழுகிய நிலையில் கிடந்ததால் அவர்கள் இறந்து 5 நாட்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை அவர்களின் சடலத்தை போலீசார் மீட்டனர். இவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஷபீனாவின் கணவர் ரக்ஷித் காணாமல் போனது தெரியவந்தது.

இவருக்கு ஷபீனா இரண்டாவது மனைவி. இந்நிலையில் ரக்ஷித் தன்னுடைய மனைவியையும் வளர்ப்பு மகளையும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும் அவரை தேடும் பணி நடைபெற்று வரும் நிலையில் அவர் பிடிபட்டால் தான் கொலைக்கான உண்மை காரணம் தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.