தமிழக ஆளுநர் ரவி அரசு சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களை நிறைவேற்றாமல் இருப்பதாக குற்றம் சாட்டி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது என்று உச்ச நீதிமன்றம் கூறிய நிலையில் 10 மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம் எனக் கூறி அதனை ரத்து செய்தது. பின்னர் அந்த பத்து மசோதாக்களுக்கும் தங்களுடைய சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் வழங்கியதோடு மசோதாக்கள் மீது இன்னும் 90 நாட்களுக்குள் ஆளுநர் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று கூறியது.
இந்நிலையில் ஆளுநர் நேர்மையற்ற வகையில் செயல்பட்டுள்ளார் என்று தற்போது நீதிமன்றம் தங்களுடைய 413-வது பக்க தீர்ப்பில் தெரிவித்துள்ளது. அதாவது உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளை மதிக்காமல் நேர்மையற்ற முறையில் ஆளுநர் செயல்பட்டதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் அவர் உச்ச நீதிமன்றத்தை அவமரியாதை செய்ததாகவும் கூறியுள்ளனர். மேலும் இந்த தீர்ப்பு தொடர்பான முழு விவரமும் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.